மொத்த மருந்து உற்பத்தி தொழில்துறைப் பூங்காக்களை மேம்படுத்துதல்
September 8 , 2022 991 days 441 0
இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்த மருந்து உற்பத்தி தொழில்துறைப் பூங்காக்களை அமைப்பதற்கான சில முன்மொழிதல்களுக்கு மருந்துத் துறை சமீபத்தில் ‘கொள்கை சார்ந்த’ ஒப்புதலை அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 13 மாநிலங்களில் இருந்து மொத்த மருந்து உற்பத்தி தொழில் துறைப் பூங்காக்களை அமைப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன.
இந்தத் திட்டம் அதிகளவு மருந்து உற்பத்தியின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கச் செய்வதோடு, இறக்குமதியினைச் சார்ந்திருக்கும் ஒரு நிலையை மாற்றுவதற்காக ஒரு தரமான சோதனை மற்றும் உள்கட்டமைப்பை எளிதாக அணுகுவதற்கான வழி வகையினைச் செய்கிறது.