18 முதல் 23 வயதிற்குட்பட்ட வயது வகுப்பினரிடையே உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது கணக்கிடப்படுகிறது.
2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வியின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது 27.1% சதவீதமாகும்.
இது கடந்த ஆண்டைவிட (26.3%) முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த விகிதமானது பட்டியலினச் சாதியினரிடையே 23.4 சதவீதமாகவும் பட்டியலினப் பழங்குடியினரிடையே 18 சதவீதமாகவும் உள்ளது.
உயர்ந்தபட்ச மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது சிக்கிமில் (76%) பதிவாகி உள்ளது.
இது தமிழ்நாட்டில் 51.4 சதவீதமாக உள்ளது.
இது கர்நாடகாவில் 32 சதவீதமாகவும் உள்ளது.
மற்ற மாநிலங்களாவன : கேரளா (39%), தெலுங்கானா (36%), ஆந்திரப் பிரதேசம் (35%) மற்றும் மகாராஷ்டிரா (32.3%).
மாணாக்கர் சேர்க்கையில் (எண்ணிக்கையில்) உத்திரப் பிரதேச மாநிலம் முன்னிலை வகிக்கிறது.
இது 49.1% மாணவர்களையும் 50.9% மாணவிகளையும் கொண்டுள்ளது.
இதனையடுத்து மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
2015-16 ஆம் ஆண்டில் 799 ஆக இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையானது 30.5% உயர்ந்து 2019-20 ஆம் ஆண்டில் 1043 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலுள்ள 42,343 கல்லூரிகளில் 60.56% கல்லூரிகள்கிராமப்புறங்களில் அமைந்து உள்ளதோடு, அவற்றில் 10.75% கல்லூரிகள் பிரத்தியேகமாக பெண்களுக்காகவே கட்டப் பட்டுள்ளன.
நாட்டிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் (78.6%) தனியாரால் நிர்வகிக்கப் படுவதில், மாநில வாரியாக ஆந்திரப் பிரதேசம் (81%), தெலுங்கானா (80%), உத்திரப் பிரதேசம் (78.5%) மற்றும் தமிழ்நாடு (77.6%) ஆகியன உள்ளன.
பல்கலைக்கழக மாணாக்கர் சேர்க்கையில் (துணை அலகுகள் உட்பட) 9,67,034 என்ற கணக்குடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும் 9,26,490 மாணாக்கர்கள் என்ற கணக்குடன் தமிழ்நாடு மாநிலமும் 8,16,110 மாணாக்கர்கள் என்ற கணக்குடன் டெல்லியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.