மொத்த விலைக் குறியீடு 2025
August 18 , 2025
3 days
39
- மொத்த விலைக் குறியீடு (WPI) பணவீக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக -0.58% வீதத்தில் எதிர்மறை மண்டலத்திலேயே இருந்தது.
- 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், WPI பணவீக்கம் -0.13% ஆக இருந்த அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 2.10% ஆக இருந்தது.
- ஜூன் மாதத்தில் 3.75% ஆக இருந்த உணவுப் பொருட்கள் மீதான பணவாட்டம் ஜூலை மாதத்தில் 6.29% ஆக பதிவானது.
- ஜூன் மாதத்தில் 22.65% ஆக இருந்த பணவாட்டம் ஆனது ஜூலை மாதத்தில் 28.96% ஆகக் குறைந்ததுடன் காய்கறிகளின் விலையில் அதிக சரிவு ஏற்பட்டது.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் ஆனது ஜூன் மாதத்தில் 1.97% ஆக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 2.05% ஆக சற்று அதிகரித்தது.
- எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் பணவாட்டம் ஆனது, ஜூலை மாதத்தில் 2.43% ஆகக் குறைந்தது, இது முந்தைய மாதத்தில் 2.65% ஆக இருந்தது.
- ஜூலை மாதத்தில் பதிவான சில்லறைப் பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.55% ஆகக் குறைந்தது.
- ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அடிப்படைக் கொள்கை விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருந்தது.
Post Views:
39