மொம்பாசா பிரகடனம் – சட்டவிரோத மீன்பிடிப்பு ஒப்பந்தம்
June 23 , 2026 90 days 189 0
சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகளால் மொம்பாசா பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கென்யாவின் மொம்பாசாவில் நடைபெற்ற 11வது ‘நமது பெருங்கடல் மாநாட்டில்’ இது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோதமான, பதிவு செய்யப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத (IUU) மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதை இந்தப் பிரகடனம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
மீன்பிடி கப்பல்களின் தரவுகள், உரிமை விவரங்கள் மற்றும் உரிமத் தகவல்களை நாடுகளுக்கிடையே சிறப்பாகப் பகிர்ந்துகொள்ள இது அழைப்பு விடுக்கிறது.
நவீனப்படுத்தப்பட்ட பதிவேடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை சீர்திருத்தங்கள் மூலம் மீன்பிடிப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான மீன்வள வெளிப்படைத் தன்மைக்கான உலகளாவிய சாசனத்தை இது ஆதரிக்கிறது.
2014-ஆம் ஆண்டில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட ‘நமது பெருங்கடல் மாநாடு’ என்பது நிலையான பெருங்கடல் நிர்வாகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய தளமாகும்.