மொஸாம்பிக்கின் கடற்படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்காக கடலோரக் காவல்படையின் பிராந்தியத் தலைமையகம் (கிழக்கு) மூலமாக நடத்தப்படும் இரண்டு வார கால பயிற்சி சென்னையில் துவங்கி இருக்கின்றது.
இந்தியாவின் சென்னையில் மொஸாம்பிக் கடற்படை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இந்தியாவின் மிக பல்திறன் வாய்ந்த, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இடைமறிப்பு படகுகள் கொண்டு பயிற்சிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பயிற்சியானது 2 நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் இந்திய அரசானது மொஸாம்பிக் கடற்படைக்கு 2 இடைமறிப்பு படகுகளை நன்கொடையாக வழங்க ஒப்புக் கொண்டது.