மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மொஹ்சினா கித்வாய், தனது 94-வது வயதில் நொய்டாவில் காலமானார்.
இவர் தொழிலாளர் நலன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
1960 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1978 ஆம் ஆண்டில் ஆசம்கர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதோடுமேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
இந்தியத் தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான இவர், காங்கிரஸ் செயற்குழு (CWC) மற்றும் மத்திய தேர்தல் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
சட்ட மேலவை, சட்டப்பேரவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய நான்கு அவைகளிலும் பணியாற்றிய ஒரு சில தலைவர்களில் இவரும் ஒருவராவார்.