2015 ஆம் ஆண்டில் 4 BBIN நாடுகளால் (வங்காளதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம்) கையெழுத்திடப்பட்ட மோட்டார் வாகன ஒப்பந்தமானது இன்னும் செயல் படுத்தப் படாமல் இருந்தது.
இந்த ஒப்பந்தமானது தங்களது நாடுகளில் இக்குழுமத்தின் ஒவ்வொரு நாடுகளின் வாகனங்களும் சரக்கு மற்றும் பயணப் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதற்கு வேண்டி அனுமதி வழங்கும்.
சமீபத்தில், இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா, வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன.