TNPSC Thervupettagam

மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பெண்கள் குறித்த ஐ.நா. அறிக்கை

October 30 , 2026 14 hrs 0 min 21 0
  • ஆயுத மோதல்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கையை ஐ.நா. பெண்கள் அமைப்பு (UN Women) வெளியிட்டது.
  • 2025 ஆம் ஆண்டில், ஆயுத மோதல்களில் 37,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; இதில் நான்கில் ஒருவர் பெண் அல்லது சிறுமி ஆவர். 2021 ஆம் ஆண்டிலிருந்து இவர்களின் விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • 75 கோடிக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் செயலில் உள்ள மோதல் நடக்கும் பகுதிகளுக்கு 50 கி.மீ தூரத்திற்குள் வாழ்கின்றனர்; 2025 ஆம் ஆண்டில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை நிகழ்ந்த 9,788 வழக்குகளை ஐ.நா. உறுதிப் படுத்தியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற 57 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்கு 5% மட்டுமே இருந்தது. 13 போர் நிறுத்த ஒப்பந்தங்களில் எதுவுமே மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை.
  • மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பெண்கள் ஊதியமில்லாத வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்களை விட ஐந்து மடங்கு அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்; சிறுமிகள் பள்ளியிலிருந்து இடைநிற்கும் வாய்ப்பு 2.5 மடங்கு அதிகமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்