மகாராஷ்டிராவின் ஹிங்கன்காட்டில் வேனா நதிக்கரைக்கு அருகில் 12 ஆம் நூற்றாண்டின் யாதவ கால கோயில் பாணி கல் தூணின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நாக்பூரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள வர்தா மாவட்டத்தின் ஹிங்கன்காட் நகரில் இந்த துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தூண் 12 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த செயுனா அல்லது யாதவ வம்சத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தாமரை மையக்கரு உட்பட இந்தச் சிற்பங்கள் கருப்பு பாசால்ட் பாறைகளால் ஆனவை மேலும் இவை ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கின்றன.
ஹேமத்பந்தி பாணி சுண்ணாம்பு சாந்து இல்லாமல் பெரிய ஒன்றோடொன்று இணைக்கப் பட்ட கல் தொகுதிகளைப் பயன்படுத்துவதற்கு பெயர் பெற்றது.
இந்தத் தூண் ஒரு கோயில் சபாமண்டபத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது கர்ப்பக் கிரகத்திற்கு அருகில் இருந்திருக்கலாம் என்பதோடுஇது இந்தப் பகுதியில் ஒரு பெரிய இடைக் கால கோயில் வளாகம் இருப்பதைக் குறிக்கிறது.