யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்த புல்வெளிகள் மற்றும் மரங்கள் உள்ள பகுதிகளை அடையாளம் காணுதல்
July 8 , 2021 1471 days 639 0
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்த அப்பகுதிகளின் புல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளை அடையாளம் காணுவதற்கான ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளன.
யானைகளுடைய வாழ்விடங்களின் புல்வெளிப் பகுதிகள் மற்றும் தீவன மரங்கள் உள்ள பகுதிகளை மீண்டும் உருவாக்கி அவற்றைச் சீரமைத்து அதன் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்திற்காக எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினை வனத்துறை அமைத்துள்ளது.
இக்குழுவானது சமீபத்தில் ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் போன்றவையும் உண்ணக் கூடிய 29 வகை புல் இனங்கள் மற்றும் 14 தீவன மர இனங்கள் அடையாளம் காணப்பட்டு தெரிவிக்கப் பட்டுள்ளன.
மேலும் இவற்றை வளர்ப்பதற்காக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தினுள்ளேயே ஒரு செடிகள் பண்ணை (வளர்ப்பிடம்) ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.