யானைகள் மீது சிவப்பு மிளகாய்த் தூள் பயன்படுத்த தடை – உத்தரகாண்ட்
October 16 , 2019 2043 days 702 0
பொது நல மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, யானைகளின் நடமாட்டத்தைப் பாதிக்கும் வகையில் மிளகாய் தூள் மற்றும் பட்டாசுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் வனத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
யானைகள் ராம் நகரில் இருந்து கார்பெட் புலிகள் காப்பகம் வரைப் பயணித்து, பின்பு அங்கிருந்து கோசி நதி வரை பயணிக்கின்றன.
கோசி நதியை அடைய, இந்த விலங்கினம் மூன்று யானை வலசைப் பாதைகள் வழியே தேசிய நெடுஞ்சாலை 121 ஐக் கடந்து செல்ல வேண்டும்.