2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தேசிய கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 22,446 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் 27,312 யானைகள் என்ற மதிப்பீட்டிலிருந்து பதிவான 18 சதவீதச் சரிவைக் குறிக்கிறது.
இந்தக் கணக்கெடுப்பை சுற்றுச்சூழல் அமைச்சகம், யானைகள் வளங்காப்புத் திட்டம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை மேற்கொண்டன.
அறிவியலாளர்கள் 21,056 சாண மாதிரிகளைச் சேகரித்து, 4,065 தனித்துவமான யானைகளை அடையாளம் காண டிஎன்ஏ அடையாளங்களைப் பயன்படுத்தினர்.
இந்தக்’ கணக்கெடுப்பு 18,255 முதல் 26,645 யானைகள் வரையிலான மொத்த எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு குறியிட்டு மீண்டும் கண்டறியும் மாதிரியைப் பயன்படுத்தியது.
கர்நாடகாவில் அதிகபட்சமாக 6,013 யானைகளும், அதைத் தொடர்ந்து அசாமில் 4,159 யானைகளும், தமிழ்நாட்டில் 3,136 யானைகளும் உள்ளன.
பிராந்தியங்களில் மிக உயர்ந்ததாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 11,934 யானைகள் உள்ளன, அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பிராந்தியத்தில் 6,559 யானைகள் உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது M-Stripes (புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு – தீவிரமானப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அந்தஸ்து) செயலியைப் பயன்படுத்தி நிலப்பரப்பு ஆய்வுகள், செயற்கைக்கோள் வரைபடமிடல் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகிய மூன்று கட்ட செயல்முறையைப் பயன்படுத்தியது.
உலகளாவிய ஆசிய யானைகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் காணப்படுகின்றன.