TNPSC Thervupettagam

யானைகள் வளங்காப்புத் திட்ட முன்னேற்றம்

July 1 , 2025 9 hrs 0 min 20 0
  • யானைகள் வளங்காப்புத் திட்டத்தின் 21வது வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆனது உத்தரகாண்ட்டில் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் (IGNFA) நடைபெற்றது.
  • இந்தக் கூட்டமானது, இந்தியாவில் யானைகள் வளங்காப்பு முயற்சிகளின் பெரும் முன்னேற்றத்தினை மதிப்பாய்வு செய்து எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதித்தது.
  • யானைகள் வளங்காப்புத் திட்டம் என்பது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு பாதுகாப்பு முன்னெடுப்பாகும்.
  • மனித-யானை மோதல் ஆனது மனித உயிர்களுக்கும் யானைகளின் பாதுகாப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
  • தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நிலவும் மோதல்களை நன்கு மேலாண்மை செய்வதற்காக பிராந்திய செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
  • 3,452.4 கி.மீ நீள இரயில் பாதைகளை உள்ளடக்கிய ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த மோதல் நிகழ்வுகளுக்கு எதிரான சில தணிப்பு நடவடிக்கைகளுக்காக 77 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • 22 மாநிலங்களில் 1,911 மரபணு குறித்த விவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், காப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள யானைகளின் டிஎன்ஏ விவரக்குறிப்பு பதிவு ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • சுமார் 16,500க்கும் மேற்பட்ட சாண மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பின் முதல் கட்டம் நிறைவு அடைந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்ற நீலகிரி யானைகள் வளங் காப்பகத்திற்கான மாதிரி யானைகள் வளங் காப்பு திட்டத்தில் (ECP) முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்