யானைக்கால் நோயினை எதிர்த்துப் போராடுவதற்கான பிரச்சாரம்
February 27 , 2023 893 days 386 0
மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது நாடு முழுவதும் மாபெரும் மருந்து விநியோகப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் யானைக்கால் நோய் (ஃபைலேரியா) எதிர்ப்பு மருந்துகளை வீட்டுக்கு வீடாக வழங்குவதன் மூலம் யானைக்கால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக நோய்ப் பாதிப்பு கொண்ட மாவட்டங்கள் இணைந்து இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது, உலக நாடுகளின் இலக்கை விட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, 2027 ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோயினை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது..
நிணநீர் ஃபைலேரியாசிஸ் (LF) என்பது க்யூலெக்ஸ் கொசுக்களால் ஏற்படும் ஒரு நோய் பரப்பிகளின் மூலம் பரவும் குறைபாடுகளுக்கு வழி வகுக்கின்ற ஒரு நோயாகும்.