TNPSC Thervupettagam

யானைக்கால் நோய் பாதிப்பு குறித்த நிலை 2024

April 24 , 2024 12 days 111 0
  • யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான ஒரு நிலையை தமிழகம் தற்போது நெருங்கி வருகிறது.
  • "தேவையான அனைத்து மாபெரும் அளவிலான மருந்து வழங்கீட்டு (MDA) சுற்றுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம், ஒரு சதவீதத்திற்கும் குறைவான மைக்ரோஃபைலேரியா (நுண்புழு) பாதிப்பு விகிதத்தை எட்டிய ஒரே இந்திய மாநிலமாக தமிழகம் உள்ளது.
  • நிணநீர் யானைக்கால் நோய் என்பது புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும். என்ற நிலையில் இதற்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்காமல் விட்டால், அது வாழ்நாள் முழுவதுமான இயலாமைக்கு வழி வகுக்கும்.
  • முன்னதாக, தமிழ்நாடு மாநிலமானது ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து ஒரு சேர நாட்டின் மொத்த யானைக்கால் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையில் 95% பங்கினைக் கொண்டிருந்தது.
  • 1996 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் MDA திட்டத்தினை ஒரு சோதனை முறைத் திட்டமாக அறிமுகப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்தது.
  • அதன் வெற்றியின் அடிப்படையில், 1998 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள 25 பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
  • 2014, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பரவல் மதிப்பீட்டு ஆய்வுகளில் (TAS) முறையே 0.18%, 0.21% மற்றும் 0.10% என்ற நுண்புழு பாதிப்பு வீதம் பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்