நேபாளத்தின் யாலா பனிப்பாறை "அழிந்து விட்டதாக" அறிவிக்கப்பட்ட முதல் நேபாள பனிப்பாறை என்று நம்பப்படுகிறது.
இது இந்து குஷ் இமயமலையில் உள்ள 54,000 பனிப்பாறைகளில் ஒன்றாகும்.
யாலா பனிப்பாறையானது ஏற்கனவே சுமார் 66 சதவீதம் குறைந்து, 1970 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 800 மீட்டர் பின்னடைந்துள்ளது.
யாலாவானது எழுத்தாளரான ஆண்ட்ரி ஸ்னேர் மேக்னசனின் நினைவாக அவரது சொற்கள் பொறிக்கப்பட்ட பனிப்பாறை அமைந்திருக்கும் ஆசியாவின் முதல் பனிப் பாறை மற்றும் உலகளவிலான மூன்றாவது பனிப்பாறை ஆகும்.
உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலக் கட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை பரவல் இழப்பு பதிவானது.