இந்திய அரசானது புவன் தளத்தின் கீழ் ‘யுக்தாரா’எனப்படும் ஒரு புதிய புவிசார் திட்டமிடல் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் புதிய தளமானது தொலை உணர்வு முறை மற்றும் புவிசார் தகவல் அமைப்பு அடிப்படையிலான தரவு ஆகியவற்றினைக் கொண்டு புதிய MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டம்) வசதிகளை ஏற்படுத்த உதவும்.
மேலும், பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட புவியிடக் குறியீடுகளின் களஞ்சியமாகவும் இது செயல்படும்.
இது இஸ்ரேல் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கப் பட்டதாகும்.
புவிசார் தளமான புவன் என்பது இஸ்ரோவின் ஒரு பலதரப்பட்ட தகவல் தளமாகும்.
இது செயற்கைக் கோள் புகைப்படங்கள் மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.