குழந்தைகள் உரிமைகள், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது, 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியத்தை (யுனிசெஃப்) நிறுவியது.
இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆதரிப்பதற்காக வேண்டி யுனிசெஃப் உருவாக்கப்பட்டது.
1953 ஆம் ஆண்டில், யுனிசெஃப் ஒரு நிரந்தர நிறுவனமாக மாறியது.
ஒவ்வொரு குழந்தையும் உயிர் வாழ்வதையும், கற்றுக் கொள்வதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதற்காக யுனிசெஃப் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My day, My rights" என்பதாகும்.