உலகளவில் அதன் முதல் துணை-தேசிய அரசாங்கக் கூட்டாளியாக யுனிசெஃப் தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு முக்கிய கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளது.
"துணை-தேசிய கூட்டாளர்" என்பது யுனிசெஃப் அமைப்பு அதிகாரப் பூர்வமாக தேசிய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒரு மாநில அரசாங்கத்துடன் (தமிழ்நாடு) இணைந்து செயல்படுகிறது என்பதாகும்.
இந்த ஒப்பந்தம் பொதுத்துறை கண்டுபிடிப்புகளை மிக நன்கு வலுப்படுத்துவதையும், குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்கான ஆதார அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனிசெப் புத்தாக்க அலுவலகம் தமிழ்நாட்டின் பொது அமைப்புகளுக்குள் தொழில் நுட்ப திறன் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும்.
யுனிசெஃப் புத்தாக்க அமைப்பு மற்றும் உலகின் எந்தவொரு துணை-தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான முதல் கூட்டுறவு இதுவாகும்.