யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருது
December 27 , 2023 505 days 476 0
பெங்களூரின் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் ஆனது யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருது விழாவில் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையம் (T2) ஆனது, ‘உலகின் மிக அழகான விமான நிலையங்களில்’ ஒன்று என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
இது மதிப்புமிக்க ‘சிறந்த உட்புறக் கட்டமைப்பிற்கான உலக பரிசு 2023’ என்ற பரிசினைப் பெற்றுள்ளது.
2வது முனையம் ஆனது முன்னதாக இந்தியப் பசுமைக் கட்டிடக் குழுவின் மதிப்புமிக்க IGBC பிளாட்டினம் தரச் சான்றிதழைப் பெற்றது.