யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவியக் கற்றல் நகரங்களின் வலையமைப்பு 2022
September 11 , 2022 987 days 510 0
யுனெஸ்கோவின் கூற்றுப் படி, இந்த வலையமைப்பானது "உத்வேகம், அறிவு மற்றும் சிறந்தப் பயிற்சி" ஆகியவற்றினை வழங்கும் உலகளாவியக் கொள்கை சார்ந்த வலை அமைப்பு ஆகும்.
இந்தியாவின் மூன்று நகரங்கள்: அதாவது தெலுங்கானாவின் வாரங்கல், கேரளாவின் திருச்சூர் மற்றும் நிலாம்பூர் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இவை யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவிய கற்றல் நகரங்களின் வலையமைப்பில் இடம் பெற்ற முதல் இந்திய நகரங்கள் ஆகும்.
தெலுங்கானாவில் யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரத்தினைப் பெற்ற இரண்டாவது நகரம் வாரங்கல் ஆகும்.
முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் உள்ள இராமப்பா கோயில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்களில் மூன்று இந்திய நகரங்களும் இடம் பெற்று உள்ளன.
கற்றல் நகரம் என்பதனை வரையறுக்கும் ஆறு அம்சங்கள் உள்ளன: அவையாவன
உள்ளார்ந்தக் கற்றலை வழங்கச் செய்வதற்காக ஒவ்வொரு துறையிலும் அதன் வளங்களைத் திறம்பட திரட்டுதல்
குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் கற்றல் முறைக்குப் புத்துயிர் அளிக்கிறது
பணியிடங்களில் கற்றலை எளிதாக்குதல்
நவீன கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல்
கற்றலில் தரமாகவும் சிறந்தும் விளங்குதல்
வாழ்க்கை முழுவதும் கற்றல் கலாச்சாரத்தை மேம்படுத்துதல்