யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் வானியல் ஆய்வகம்
August 6 , 2022 1080 days 572 0
பீகாரில் உள்ள லங்காத் சிங் கல்லூரியில் உள்ள வானியல் ஆய்வுக்கூடம் ஆனது தற்போது யுனெஸ்கோ அமைப்பினுடைய, உலகின் முக்கியமான அழிந்து வரும் பாரம்பரிய ஆய்வகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
123 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லூரியில் 1916 ஆம் ஆண்டில் இந்த ஆய்வகம் என்பது கட்டப்பட்டது.
1970களின் ஆரம்பக் காலம் வரை இந்த ஆய்வகம் மற்றும் கோளரங்கமானது திருப்தி கரமான முறையில் செயல்பட்டது.
ஆனால் காலப்போக்கில் படிப்படியாக இதன் செயல்பாடுகள் சரிவடைந்து குறையத் தொடங்கியது.
தற்போது, இது முற்றிலும் செயல்பாடற்ற நிலையில் உள்ளது.