யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரம் - ஜெய்ப்பூர்
July 7 , 2019
2228 days
712
- “மென்சிவப்பு நகரமான” ஜெய்ப்பூர் இந்தியாவின் 38வது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- யுனெஸ்கோவினால் அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலகப் பாரம்பரியக் குழுவின் 43வது அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- கோவிந்த் தேவ் ஆலயம், நகர அரண்மனை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மகால் ஆகியவை ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற தளங்களாகும்.
- ஜெய்ப்பூர் நகரமானது 1699 முதல் 1744 வரை ஜெய்ப்பூரை ஆட்சி செய்த மகாராஜா ஜெய்சிங் II என்பவரினால் 1727 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
Post Views:
712