TNPSC Thervupettagam

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலைநகரம் - இத்தாலி

July 4 , 2026 4 days 80 0
  • மொத்தம் 61 பாதுகாக்கப்பட்ட தளங்களுடன், உலகிலேயே அதிக யுனெஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்ட நாடாக இத்தாலி உருவெடுத்து உள்ளது.
  • இத்தாலி 55 கலாச்சாரப் பாரம்பரியத் தளங்களையும், 6 இயற்கை மரபுத் தளங்களையும் கொண்டுள்ளதுடன் இது எந்தவொரு நாட்டிற்கும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
  • 2025-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட சார்டினியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 'டோமஸ் டி ஜனாஸ்' இறுதிச் சடங்கு மரபு, இதிலுள்ள சமீபத்திய சேர்க்கையாகும்.
  • கலாச்சார அல்லது இயற்கையான முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த உலகளாவிய மதிப்புடைய (OUV) தளங்களுக்கு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அந்தஸ்தை வழங்குகிறது.
  • ரோம், புளோரன்ஸ், வெனிஸ், பைசா, பாம்பீ, டோலமைட்ஸ் மற்றும் எட்னா மலை போன்ற முக்கிய அடையாளங்களை இத்தாலியின் பாரம்பரியம் உள்ளடக்கியுள்ளது.
  • இத்தாலியின் வளமான பாரம்பரியம், ரோமானியப் பேரரசு, மறுமலர்ச்சிக் காலம், இடைக்கால நகரங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் பல்வேறு இயற்கை நிலப்பரப்புகளின் மரபைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்