மொத்தம் 61 பாதுகாக்கப்பட்ட தளங்களுடன், உலகிலேயே அதிக யுனெஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்ட நாடாக இத்தாலி உருவெடுத்து உள்ளது.
இத்தாலி 55 கலாச்சாரப் பாரம்பரியத் தளங்களையும், 6 இயற்கை மரபுத் தளங்களையும் கொண்டுள்ளதுடன் இது எந்தவொரு நாட்டிற்கும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
2025-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட சார்டினியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 'டோமஸ் டி ஜனாஸ்' இறுதிச் சடங்கு மரபு, இதிலுள்ள சமீபத்திய சேர்க்கையாகும்.
கலாச்சார அல்லது இயற்கையான முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த உலகளாவிய மதிப்புடைய (OUV) தளங்களுக்கு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அந்தஸ்தை வழங்குகிறது.
ரோம், புளோரன்ஸ், வெனிஸ், பைசா, பாம்பீ, டோலமைட்ஸ் மற்றும் எட்னா மலை போன்ற முக்கிய அடையாளங்களை இத்தாலியின் பாரம்பரியம் உள்ளடக்கியுள்ளது.
இத்தாலியின் வளமான பாரம்பரியம், ரோமானியப் பேரரசு, மறுமலர்ச்சிக் காலம், இடைக்கால நகரங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் பல்வேறு இயற்கை நிலப்பரப்புகளின் மரபைப் பிரதிபலிக்கிறது.