TNPSC Thervupettagam

யுனெஸ்கோ உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை 2026

November 18 , 2026 2 days 84 0
  • கல்வி அணுகல் மற்றும் சமத்துவத்தில் உலகளாவிய முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, “Access and Equity: Countdown to 2030” என்ற தலைப்பிலான 2026 ஆம் ஆண்டு உலகளாவிய கல்வி கண்காணிப்பு (GEM) அறிக்கையை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 273 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளனர்; இது ஆறு பேரில் ஒருவருக்குச் சமமாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனை எட்டியுள்ளது; இது 2000 ஆம் ஆண்டிலிருந்து 327 மில்லியன் (30%) அதிகரிப்பாகும்.
  • 2000 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 33% குறைந்திருந்த பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, 2015 ஆம் ஆண்டிலிருந்து 3% அதிகரித்துள்ளது.
  • 2000 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய கல்வி நிறைவு விகிதங்கள் ஆரம்பக் கல்வியில் 77%-லிருந்து 88%-ஆகவும், கீழ் இடைநிலைக் கல்வியில் 60%-லிருந்து 78%-ஆகவும், மேல்நிலைக் கல்வியில் 37%-லிருந்து 61%-ஆகவும் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்