TNPSC Thervupettagam

யுனெஸ்கோ பட்டியலில் 7 இந்திய இயற்கைத் தளங்கள்

September 18 , 2025 4 days 18 0
  • 2025 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அதன் தற்காலிக உலகப் பாரம்பரியப் பட்டியலில் ஏழு புதிய இந்தியத் தளங்களைச் சேர்த்தது.
  • இது தற்காலிகப் பட்டியலில் உள்ள மொத்த இந்தியத் தளங்களின் எண்ணிக்கையை 69 ஆக அதிகரித்தன.
  • 69 தளங்களில், 49 தளங்கள் கலாச்சாரப் பிரிவின் கீழும், 17 இயற்கைப் பிரிவின் கீழும், மூன்று கலப்புப் பிரிவின் கீழும் சேர்க்கப்பட்டன.
  • பஞ்ச்கனி மற்றும் மகாபலேஷ்வர் (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் உள்ள தக்காண வரிப் பாறைகள் உலகின் மிகப்பெரிய பசால்டிக் / எரிமலைப்பாறைக் குழம்பு அமைப்புகளில் ஒன்றாக இருப்பதற்காக சேர்க்கப்பட்டன.
  • செயிண்ட் மேரிஸ் தீவுத் தொகுப்பு (கர்நாடகா) கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த அதன் நெடுவரிசை பாசால்டிக் பாறைக் குழம்பு  அமைப்புகளுக்காக பட்டியலிடப்பட்டது.
  • கிழக்கு காசி மலைகளில் (மேகாலயா) உள்ள மேகலாயன் காலக் குகைகள் அவற்றின் விரிவான சுண்ணாம்புப் பாறைக் குகை அமைப்புகளுக்காக சேர்க்கப்பட்டன.
  • கிஃபைரில் (நாகாலாந்து) உள்ள நாகா மலை ஓபியோலைட் கண்டத் தகடுகளில் தள்ளப் பட்டு வெளித்தோன்றிய பெருங்கடல் தட்டுப் பிரிவுகளைக் குறிக்கிறது.
  • விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள எர்ரா மட்டி திப்பலு என்பது கடல் மட்ட மாற்றங்களைக் காட்டும் சிவப்பு மணல் திட்டுகளின் தேசியப் புவி சார் பாரம்பரிய நினைவுச் சின்னமாகும்.
  • திருப்பதியில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள திருமலை மலைகள் அவற்றின் ஒருங்கிணைந்தச் சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக பட்டியலிடப் பட்டன.
  • கேரளாவில் உள்ள வர்க்கலா அதன் தனித்துவமான கடலோரப் பாறைகள் மற்றும் முக்கியமான புவியியல் அமைப்புகளுக்காக சேர்க்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்