யுரேனியச் சுரங்கம் - ராஜஸ்தான்
July 4 , 2022
1107 days
500
- இந்தியாவில் யுரேனியச் சுரங்கத் தொழிலினை ராஜஸ்தான் தொடங்கியுள்ளது.
- ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள கண்டேலா தாலுகாவில் உள்ள ரோஹில் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒரு முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் 12 மில்லியன் டன் யுரேனியம் இருப்பு இந்தப் பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது.
- தற்போது இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூமின் ஜஜகோடா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் யுரேனியம் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
- உலகில் அதிகளவில் யுரேனியம் உற்பத்தியாகும் நாடுகள் கஜகஸ்தான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியனவாகும்.
- ரஷ்யா, நமீபியா, உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் யுரேனியத்தின் கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Post Views:
500