யுவ சங்கம் என்பது வடகிழக்குப் பிராந்தியத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும் இடையே நெருங்கிய உறவுகளை உருவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தத் தளமானது, "ஏக் பாரத் ஷ்ரேஷ்தா பாரத்" என்ற நோக்கத்தின் கீழ் தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு பகுதிகளுக்கிடையே நிலவும் கலாச்சாரத்தினைப் பற்றி கற்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெறுவர்.