தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC - National Cooperative Development Corporation) ‘யுவ சஹாகர்’ என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது.
இளைஞர்களுக்கு உகந்த திட்டமான இது இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது NCDC-ஆல் உருவாக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் கூட்டுறவு தொடக்க நிறுவனம் மற்றும் புத்தாக்க நிதியம் (CSIF - Cooperative Start-up and Innovation Fund) என்பதுடன் இணைக்கப்பட்டது ஆகும்.
இது வடகிழக்குப் பிராந்தியங்களின் கூட்டுறவு நிறுவனங்கள், உயர் இலட்சிய மாவட்டங்கள் மற்றும் பெண்கள் அல்லது SC/ST அல்லது மாற்றுத் திறனாளிகளுடன் கூடிய கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ஊக்குவிப்பை வழங்குகின்றது.
இந்த திட்டங்களுக்கான செலவினங்களில் மேற்கண்ட சிறப்புப் பிரிவுகளில் உள்ளோருக்கு 80% நிதியும் மற்றவர்களுக்கு 70% நிதியும் அளிக்கப்படும்.