இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமானது மே மாதத்தில் நடைபெற இருக்கும் “யுவ விக்யானி காரியகரம்” என்பதின் 2வது நிகழ்விற்கு விண்ணப்பிப்பதற்காக ஒரு நிகழ்நேர நடைமுறையைத் தொடங்கியுள்ளது.
யுவிகா என்பது விண்வெளி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் இரண்டு வார கால பயிற்சித் திட்டமாகும்.
எட்டாம் வகுப்பு படித்து முடித்த பள்ளி மாணவர்கள் மற்றும் தற்பொழுது 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (2019-20) இத்திட்டத்திற்குத் தகுதி உள்ளவர்களாவர்.
இத்திட்டத்திற்கு வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.