புனேயிலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பானது ஒரு புதிய தவளை இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
இவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் பரவியுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள நன்னீர் பகுதிகளில் வளர்கின்றன.
இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பு, புவனேஷ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவிலுள்ள கார்மல் மவுன்ட் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து இதனைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தத் தவளையின் பொதுப் பெயர் ஜலதாரா நீர் தத்தி தவளை மற்றும் இதன் அறிவியல் பெயர் யூஃப்லிக்டிஸ் ஜலதாரா என்பதாகும்.
இந்தத் தவளையானது முதன்முதலில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள தட்டேகாட் என்ற பறவைகள் சரணாலயத்தின் அருகிலுள்ள நன்னீர் நிலைகளில் கண்டறியப் பட்டது.