TNPSC Thervupettagam

யூரோ மண்டலத்தின் 21வது உறுப்பினர் – பல்கேரியா

January 5 , 2026 2 days 60 0
  • பல்கேரியா நாடானது யூரோவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதுடன், யூரோ  மண்டலத்தின் 21வது உறுப்பினராக மாறியது.
  • பல்கேரியா 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பயன்பாட்டில் இருந்த அதன் தேசியப் பண மதிப்பான லெவிற்கு மாற்றாக யூரோவினை ஏற்றது.
  • பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்த சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • யூரோ ஏற்பு ஆனது வர்த்தகத்தை அதிகரிப்பது, விலைகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • யூரோ மண்டலம் என்பது யூரோவை (€) தங்கள் பொதுவான பண மதிப்பாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குழுவாகும்.
  • பல்கேரியாவின் சேர்ப்புடன், யூரோ தற்போது ஐரோப்பா முழுவதும் சுமார் 350 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்