11வது சர்வதேச யோகா தினமானது ஜூன் 21 ஆம் தேதியன்று 'Yoga for One Earth, One Health' என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
இதில் 'யோகா சங்கம்' என்ற பெருமளவில் மக்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியானது இந்தியா முழுவதும் 1,00,000 இடங்களில் நடைபெற்றது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியக் கலாச்சார உறவுகள் சபையானது (ICCR) 191 நாடுகளில் பல்வேறு யோகா நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
கூடுதலாக, ICCR 'யோகா பந்தன்' நிகழ்வினையும் நடத்தியது.
இது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழான ஒரு முதன்மையான சர்வதேசத் திட்டமாகும்.