மேற்கு வங்கத்தின் ஹாசிமாராவிலுள்ள விமானப் படை மையத்தின் 101வது படைப் பிரிவில் ஜெட் விமானங்கள் அதிகாரப்பூர்வ முறையில் இணைத்து, இந்திய விமானப் படை தனது இரண்டாவது ரஃபேல் போர் விமானப் படைப் பிரிவினைத் தொடங்கி உள்ளது.
இந்திய விமானப் படையானது இதுவரையில் 26 ரஃபேல் ஜெட் விமானங்களை எட்டுத் தொகுதிகளாகப் படையில் இணைத்துள்ளது, இதற்கு முந்தையத் தொகுதியானது ஜூலை 21 அன்று இணைக்கப்பட்டது.
‘Falcons of Chamb and Akhnoor’ என்று புகழப்படும் இந்தப் படைப் பிரிவானது பாலம் (Palam) என்னுமிடத்தில் 1949 ஆம் ஆண்டு மே 01 அன்று உருவாக்கப்பட்டது.
இது அன்றையக் காலங்களில் ஹார்வர்டு, ஸ்பிட்ஃபைர், வேம்பைர், Su-7 மற்றும் MiG-21M போன்ற விமானங்களை இயக்கியது.
மேலும் 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தானியப் போர்களிலும் இப்படையானது பங்கேற்றது.
நம்பர் 17 கோல்டன் ஆரோவ்ஸ் (Golden Arrows) எனப்படும் முதலாவது ரஃபேல் படைப் பிரிவானது அம்பாலாவில் அமைந்துள்ளது.