மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் “ரக்ஷா கயான் சக்தி திட்டத்தை” புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இது உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழிற்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை (IPR - Intellectual Property Right) மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு உற்பத்தித் துறையால் ஏற்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் தர உறுதிப்பாடு பொது இயக்குநரகத்திடம் (Directorate General of Quality Assurance - DGQA) ஒப்படைக்கப்பட்டு உள்ளது.