ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ரதடியா ரி தேரியில் ஒரு புதிய ஹரப்பா குடியேற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்பதோடு இது இராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் உள்ள முதல் சிந்து சமவெளி தளத்தைக் குறிக்கிறது.
இது இராம்கரிலிருந்து 60 கிமீ தொலைவிலும் பாகிஸ்தானின் சதேவாலாவிலிருந்து 17 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த இடம் என்பது வடக்கு இராஜஸ்தானை குஜராத்தின் பண்டைய நாகரிகங்களுடன் இணைக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பில் மொஹெஞ்சதாரோ மற்றும் கன்மரில் காணப்பட்டதைப் போன்ற சிவப்பு மட்பாண்டங்கள், சுடுமண் பாண்டப் பொருட்கள், கற்கருவிகள் மற்றும் சூளை செங்கற்கள் ஆகியவை அடங்கும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தைச் சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு 2600–1900) வளர்ச்சியடைந்த நகர்ப்புற கட்டமைப்பினைச் சேர்ந்ததாக கருதுகின்றனர் என்பதோடு இது ஒரு கிராமப்புற ஹரப்பா குடியேற்றப் பகுதியாக அடையாளம் காண்கின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள ரோஹ்ரியில் இருந்து பெறப்பட்ட கருங்கல் கத்தி சான்றுகள் ஹரப்பா வலையமைப்பிற்குள் இருந்த நீண்ட தூர வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் குறிக்கின்றன.