TNPSC Thervupettagam

ரந்தம்பூரில் அரிய வகை பெரும் பூனைகளின் சங்கமம்

April 25 , 2026 11 hrs 0 min 48 0
  • ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் இந்தியாவில் நடந்த மிக அரிய வனவிலங்கு நிகழ்வான புலி, சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலி ஆகியவை ஒன்றாகக் காணப் பட்டன.  
  • இந்த நிகழ்வு சாக்கல் நதிக்கு அருகிலுள்ள மண்டலம் 9-இல் இந்த மூன்று வேட்டையாடும் விலங்குகளும் ஒரே நேரத்தில் 1-2 கி.மீ சுற்றளவில் காணப்பட்டன.
  • விலங்குகள் வெவ்வேறு வாழ்விடங்கள் மற்றும் வேட்டையாடும் நேரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு இடையேயான போட்டியைத் தவிர்க்கும் "வாழிடப் பகிர்வு" காரணமாக, இத்தகைய சகவாழ்வு அரிதானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
  • புலிகள் தங்களது எல்லை ஆதிக்கம் கொண்ட மாமிச உண்ணிகள், சிறுத்தைகள் எந்தச் சூழலிலும் வாழக்கூடியவை மற்றும் நேரடி மோதலைத் தவிர்க்கக் கூடியவை, அதே சமயம் சிவிங்கிப்புலிகள் திறந்த புல்வெளிகளை விரும்புவதோடு, வேட்டையாடுவதற்குத் தனது வேகத்தை மட்டுமே நம்பியுள்ளன.
  • ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகம் சுமார் 70 புலிகள் மற்றும் வளமான வனவிலங்குப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு முக்கியப் பல்லுயிர் பெருக்க மையமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்