ரபேல் ஒப்பந்தம் - தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை
February 18 , 2019 2359 days 660 0
ரபேல் ஒப்பந்தம் மீதான இந்தியக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையானது, “இந்திய விமானப் படையின் மூலதனக் கொள்முதல்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையானது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு தொகுதி ரபேல் ஒப்பந்தம் குறித்தும் ஒப்பந்தத்தின் விலை மற்றும் கொள்முதல் குறித்தும் விவரிக்கிறது.