TNPSC Thervupettagam
December 7 , 2025 24 days 102 0
  • ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ரமோஜி சிறப்பு விருதுகள் 2025 விழாவில் கிராமப்புற மேம்பாட்டிற்காக அம்லா அசோக் ருயாவுக்கு உயர் நிலை விருது வழங்கப் பட்டது.
  • அவர் "தண்ணீரின் தாய்" என்று அழைக்கப்படுகிறார்.
  • ஆகார் அறக்கட்டளை மூலம் ருயா ஆற்றியப் பணி, வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நீர்ச் சேமிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • ருயாவின் முன்னெடுப்புகளில் பல வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தடுப்பணைகள் கட்டுவது மற்றும் விவசாய மீள்தன்மையை ஆதரிப்பது ஆகியவை அடங்கும்.
  • ஜெய்தீப் ஹர்திகர் (பத்திரிகை), ஸ்ரீகாந்த் பொல்லா (இளையோர்களின் வழிகாட்டி/யூத் ஐகான்), பல்லபி கோஷ் (பெண்களின் சாதனைகள்) மற்றும் பேராசிரியர் மாதவி லதா கலி (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) ஆகியோரும் விருது பெற்றனர்.
  • சேவை, ஒழுக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆற்றப்படும் பெரும் பங்களிப்புகளைக் கௌரவிப்பதற்காக ரமோஜி சிறப்பு விருதுகள் 2025 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்