September 4 , 2023
620 days
406
- புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரவி கண்ணன் (இயக்குனர்) 2023 ஆம் ஆண்டு ரமோன் மக்சேசே விருது பெற்றவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.
- மேலும் இவர் ‘முழுமையான சுகாதார நலன் வழங்கீட்டிற்கான நாயகன்' விருதினையும் பெற்றவர் ஆவார்.
- தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ரவி, முன்னதாக சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
- 65வது ரமோன் மக்சேசே விருதினைப் பெற்ற மற்ற வெற்றியாளர்கள்
- கோர்வி ரக்ஷந்த் – வங்காளதேசம்
- யூஜெனியோ லெமோஸ் – தைமோர்-லெஸ்தே
- மிரியம் கரோனல்-ஃபெரர் - பிலிப்பைன்ஸ்
- இந்த விருதானது பெரும்பாலும் ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப் படுகிறது.

Post Views:
406