TNPSC Thervupettagam

ரயில்வே உதவிமைய எண் 139

January 5 , 2020 2050 days 701 0
  • ரயில் பயணங்களின் போது பயணிகளின் குறைகளை விரைவாகக் களைவது மற்றும் விசாரணைகளை விரைவாக மேற்கொள்வது ஆகியவற்றிற்காக இந்திய ரயில்வே நிறுவனம் 139 என்ற ஒரு ஒருங்கிணைந்த உதவி மைய எண்ணை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ஏற்கனவே இருக்கும் உதவி மைய எண்களின் ஒருங்கிணைந்த வடிவமாகும் (குறிப்பாக 182 தவிர). இது பல உதவி மைய எண்களின் காலதாமதத்தைத் தவிர்க்கவும் ரயில் பயணத்தின் போது பயணிகளின் அனைத்துத் தேவைகளுக்கும் அவர்களை ரயில்வேயுடன் இணைக்கவும் வழிவகை செய்கின்றது.
  • இந்த உதவி மைய எண் ஆனது 12 மொழிகளில் செயல்பட இருக்கின்றது.
  • இது ஒரு ஊடாடும் குரல் எதிர்வினை (பதிலெதிர்ப்பு) முறையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இதனைப் பொதுவான புகார்கள், விபத்துக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்