ரயில்வே துறை மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு இடையேயான ஒப்பந்தம்
October 23 , 2019 2113 days 652 0
மின் வர்த்தக நிறுவனமான அமேசானின் பொருட்களை மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் கொண்டு செல்ல ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
கிழக்கு ரயில்வே மண்டலத்தில் சீல்டா மற்றும் டங்குனி ஆகிய நகரங்களுக்கு இடையிலான உள்ளூர் மின்சாரச் சேவையில் இந்தப் போக்குவரத்துச் சேவை தொடங்கியது.
ரயில்வே அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, சரக்குகள் அதிகபட்சப் போக்குவரத்து இல்லாத நேரங்களில் கொண்டு செல்லப்படும்.
கட்டணம் மூலம் அல்லாத வருவாயை உருவாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் மற்றும் பொதி வணிகத்தை அதிகரிப்பதற்கும் ரயில்வேயின் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.