TNPSC Thervupettagam

ரயில்வே மின்மயமாக்கலில் தலைமைத்துவம்

July 29 , 2026 16 hrs 0 min 34 0
  • 99.6% அகல ரயில் பாதை வலையமைப்பை மின்மயமாக்கியதன் மூலம், ரயில்வே மின்மயமாக்கலில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது.
  • சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • சீனா (82 சதவீதம்), ஸ்பெயின் (67 சதவீதம்), ஜப்பான் (64 சதவீதம்), பிரான்ஸ் (60 சதவீதம்) மற்றும் ஐக்கியப் பேரரசு (39 சதவீதம்) உள்ளிட்ட பல முக்கிய ரயில்வே வலையமைப்புகளை விட இது முன்னணியில் உள்ளது.
  • ரயில் போக்குவரத்து ஒரு டன்-கிலோமீட்டருக்கு சுமார் 11.5 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என்ற நிலையில் இது, சுமார் 101 கிராம் வெளியிடும் சாலைப் போக்குவரத்தை விட கிட்டத்தட்ட 89 சதவீதம் குறைவாகும்.
  • மின்மயமாக்கல், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் இந்திய ரயில்வேயின் நிலையையும் குறைத்துள்ளது.
  • சுற்றுச்சூழல் நன்மைகளைத் தவிர, மின்சார இழுவை முறையானது அதிக இழுவைத் திறன், வேகமான ரயில் வேகம் மற்றும் குறைந்த பயண நேரம் ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதன் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளது.
  • ரயில்வே மண்டலங்களைப் பொறுத்தவரை, மத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு, தென் மத்திய மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வேக்கள், கொங்கன் ரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ உள்ளிட்ட 15 மண்டலங்கள் ஏற்கனவே 100 சதவீத அளவிலான மின் மயமாக்கலை அடைந்துள்ளன.
  • மாநில அளவில், ஆந்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் முழுமையான ரயில்வே மின்மயமாக்கலை அடைந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்