TNPSC Thervupettagam

ரயில்வேயின் எதிர்காலம் என்ற அறிக்கை

February 2 , 2019 2370 days 704 0
  • மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency-IEA) “ரயில்வேயின் எதிர்காலம்” என்ற அறிக்கையை வெளியிட்டார்.
  • ரயில்வேயின் எதிர்காலம் என்ற அறிக்கையானது, ரயில்வேயின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களின் மதிப்பீடு மூலம் உலகம் முழுவதுமுள்ள ரயில்வேக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் அமைந்த முதலாவது அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கை ரயில்வேயின் எதிர்காலம் மீதான தற்போதைய திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தாக்கத்தை சீராய்வு செய்கின்றது.

சர்வதேச ஆற்றல் முகமை

  • இது தனது 30 உறுப்பினர் நாடுகள் மற்றும் 8 நட்பு நாடுகளுக்கு நம்பகமான, மலிவான மற்றும் சுத்தமான ஆற்றலை உறுதி செய்திட உழைத்திடும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது 1974 ஆம் ஆண்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் ஆற்றல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உலகம் முழுவதுமான பங்களிப்பு ஆகிய நான்கு முக்கிய திட்டங்களால் வழிநடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்