ரவீணா தண்டன் - சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பரத் தூதர்
August 25 , 2018 2607 days 822 0
மும்பை நகரைச் சேர்ந்த சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் (SGNP) விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை ரவீணா தண்டன்-ஐ மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.
அவர் சுற்றுச்சூழல் உணர்வுள்ள குடிமகனாக இருப்பதால் சக குடிமக்களுக்கு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். முன்னர் இது போரிவளி தேசிய பூங்கா என்றழைக்கப்பட்டது. 1996ல் தற்போதைய பெயரான சஞ்சய் காந்தி என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.
மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக இது குறிப்பிடத்தக்கது மற்றும் உலகில் மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வருகையுடைய பூங்காக்களில் ஒன்றாகவும் உள்ளது.
2000 ஆண்டுகள் பழமையான சில 160 குடைவரைக் குகைகள் இந்த பூங்காவின் உள்ளே அமைந்துள்ளன மற்றும் இது ஒரு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளமாகும்.