லாக்கஸ் சோம்னியாரம் என்றும் அழைக்கப்படும் ‘கனவுகளின் ஏரி’ என்ற ஒரு தளமானது நிலவின் மேற்பரப்பில் ‘ரஷித் ரோவர்’ என்ற விண்கலம் தரையிறங்கச் செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் லூனார் (சந்திரன்) திட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கியத் தளமாகும்.
இது 2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் செலுத்தப் படும்.
சந்திரன் சார்ந்த ஆய்வில் அரபு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலாவது நாடாகவும் மற்றும் உலகளவில் நான்காவது நாடாகவும் உருவெடுக்கிறது.