TNPSC Thervupettagam

ரஷ்ய புதைபடிவ எரிபொருள் இறக்குமதிகள்

January 18 , 2026 4 days 44 0
  • ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததால், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து புதைபடிவ எரிபொருட்களை வாங்குபவர்களில் இந்தியா மூன்றாவது இடத்திற்குச் சென்றது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 3.3 பில்லியன் யூரோவாக இருந்த இந்தியாவின் ரஷ்ய ஹைட்ரோ கார்பன் இறக்குமதி 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் 2.3 பில்லியன் யூரோவாக குறைந்தது.
  • இது இந்தியாவை துருக்கிக்குப் பின்னால் (சுமார் 2.6 பில்லியன் யூரோ) தள்ளிய அதே நேரத்தில் சிறந்த இறக்குமதியாளர்களில் ஏற்றுமதி வருவாயில் 48% பங்குடன் சீனா மிகப் பெரிய புதைபடிவ எரிபொருள் வாங்குபவராக இருந்தது.
  • இந்தியாவின் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியில் கச்சா எண்ணெய் 78% (1.8 பில்லியன் யூரோ) ஆகும்; நிலக்கரி (424 மில்லியன் யூரோ) மற்றும் எண்ணெய் பொருட்கள் (82 மில்லியன் யூரோ) மீதமுள்ளவை ஆகும்.
  • இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா டிசம்பரில் சுமார் 25% பங்கினைக் கொண்டிருந்தது என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 35% ஆக இருந்தது.
  • அமெரிக்கத் தடைகள், G7 தலைமையிலான விலை நிர்ணய வரம்புக் கொள்கை மற்றும் தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களின் குறைக்கப் பட்ட கொள்முதல்கள் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டது.
  • இந்தத் தரவு எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) மூலம் சிறப்பிக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்