ஐக்கிய நாடுகள் அவையின் உலகச் சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா விலக முடிவு செய்துள்ளதாக ஐநா உலகச் சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராகப் போர் தொடுத்ததற்காக ரஷ்ய நாட்டினை இடை நிறுத்தம் செய்வதற்காக இந்த அமைப்பில் ஒரு வாக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டதை அடுத்து, இந்த அமைப்பில் இருந்து விலக ரஷ்யா முடிவு செய்தது.
ஐக்கிய நாடுகள் அவையின் உலகச் சுற்றுலா அமைப்பானது, அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றினை இடை நிறுத்தம் செய்வதைப் பற்றி விவாதிப்பதற்காக கூடியது இதுவே முதல் முறையாகும்.