TNPSC Thervupettagam

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை

May 21 , 2025 14 hrs 0 min 30 0
  • ரஷ்யா மற்றும் உக்ரைனிய நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத தங்கள் முதல் நேரடியான அமைதிப் பேச்சு வார்த்தைக்காக இஸ்தான்புல் நகரில் கூடினர்.
  • இரு நாடுகளும் தலா 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன.
  • ஆனால் நிபந்தனையற்றப் போர் நிறுத்தத்திற்கான உக்ரைனின் அழைப்பை ரஷ்யா நிராகரித்தது.
  • ரஷ்யா முதன்மையாக அது கோரும் பிரதேசத்தை விட்டுக் கொடுக்கவும், உக்ரைனின் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து பெறும் விருப்பத்தினைக் கை விட்டு நடுநிலை நாடாக மாறவும் கோரியது.
  • ரஷ்யாவானது கிரிமியா (2014) மற்றும் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா (2022 ஆம் ஆண்டு முதல்) ஆகியவற்றினை உரிமை கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்